வரும் 29 ஆம் தேதி ஒளி முழக்க போராட்டம்.திருச்சியில் நடந்த மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு.
மின்சார சட்ட திருத்தத்தை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு.
திருச்சியில் நடந்த மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு.
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் திருச்சி மன்னார்புரம் சி.ஐ.டி.யு. அலுவலத்தில். மாநில துணை தலைவர் எஸ். ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மிகவும் ஆபத்தான பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். அணுமின் உற்பத்திக்கு தனியாருக்கு அனுமதி வழங்குவதை கைவிட வலியுறுத்தியும் , மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கும் மின்சார சட்ட திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி திருச்சி மிளகு பாறை மின்வாரிய அலுவலகம் முன்பு ஒளி முழக்கப் போராட்டம் நடத்துவது,
இதேபோல் துறையூர், மணப்பாறை, லால்குடி , முசிறி, திருவரங்கம், மன்னார்புரம் பகுதியில் உள்ள அனைத்து பிரிவு முன் வாரிய அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்துவது,
இந்தப் போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு அனைவரையும் கலந்து கொள்ள செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இன்ஜினியர் சங்கம், பொறியாளர் அசோசியன், ஐக்கிய சங்கம் , பெடரேசன் சம்மேளனம், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பைச்சார்ந்த நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், வேலுச்சாமி. சத்தியநாரயணன் , வெங்கடேசன் , முருகானந்தம் இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வட்ட செயலாளர் பழனியான்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.

