பெண் ஏட்டு மற்றும் பணியில் போதையில் இருந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் ஒரே நாளில் சஸ்பெண்ட்.திருச்சி காவல்துறையினர் அதிர்ச்சி.
திருச்சி:பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா் மற்றும் மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தவா் தலைமைக் காவலா் பழனியம்மாள் (வயது 40). அண்மையில் இவா் சரிபாா்த்து அனுப்பிய விண்ணப்பதாரா் அந்தப் பகுதியில் இல்லாததால் அந்தக் கடவுச்சீட்டு, மீண்டும் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கே திரும்பி வந்தது.
இதுகுறித்து திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பான விசாரணையில் கடவுச்சீட்டு பரிசோதனையின்போது தலைமைக் காவலா் பழனியம்மாள் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளாதது தெரியவந்தது. இதையடுத்து தலைமைக் காவலா் பழனியம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டாா்.
ஆயுதப்படைக்காவலா்: மாவட்ட ஆட்சியரகம் அருகே திமுக கூட்டணிக் கட்சியினர் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று 24.12.25 புதனக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த மாநகர ஆயுதப்படை காவலா் சதீஷ் (வயது 30) மயங்கி விழுந்தாா். மற்ற போலீஸாா் அவரை மீட்டபோது, சதீஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையிலும் அவர் அது அருந்தி இருந்தது உறுதியானது. இதையடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டு உள்ளார்
நேற்று ஒரே நாளில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சி காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

