திருச்சி சமயபுரத்தில்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய
கவிஞர் ஜோசன் ரஞ்சித் .
சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நியூ பேஸ் பவுண்டேஷன் சார்பாக திருச்சி சமயபுரம் ஹோப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. 
இதில் கவிஞர் ஜோசன் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அ
னைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த கிறிஸ்மஸ் விழாவில் ஹோப் நிறுவன
பணியாளர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின்
பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.

