திருச்சி பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்மஸ் பெருவிழா-2K25. நிறுவனர் ராமச்சந்திரனை வாழ்த்தி சென்ற பொதுமக்கள் .
கடந்த வெள்ளிக்கிழமை (19-12-2025) மாலை பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்மஸ் பெருவிழா-2K25 முன்னிட்டு பகிர்வின் பெரு விழா திருச்சி ,ஸ்ரீரங்கம் , ஆர் எஸ் ரோட்டில் ,உள்ள சவேரியார் புரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேர்ல் டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் வழக்கறிஞர் டாக்டர் ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் , அறக்கட்டளையின் சார்பாக 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி 5 கிலோ பருப்பு, சக்கரை, உப்பு , போன்ற மளிகை பொருட்களும், வெங்காயம் , தக்காளி உருளைக்கிழங்கு, போன்ற காய்கறி வகைகளையும் தானமாக வழங்கினார்கள், 
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தன்னார்வ உறுப்பினர்களும் கலந்து கொண்ட
இந்த நிகழ்வில் சவேரியார் புரத்தின் பங்குத்தந்தை அருட்திரு .அருள் சேவியர், மற்றும் முன்னாள் பங்கு தந்தை மற்றும் அதிபர் அருட்திரு அந்தோணி தாஸ் அவர்களால் , கிறிஸ்மஸ் விழாவின் சிறப்பினையும் , பகிர்வின் மகிழ்வு சிறப்பு பற்றியும் , அருட்தந்தையர்களால் கிறிஸ்மஸ் செய்தியும் வழங்கப்பட்டது.
மேலும் புனித சிலுவை மட அருட் சகோதரி ஜூலி இந்நிகழ்வினை வாழ்த்தி சிறப்பாக வழி நடத்தினார்கள்.

மேலும் அங்குள்ள மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டு அங்குள்ள குடும்பங்களோடு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பகிர்வின் பெருவிழா-2K25 சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஏழை எளிய பொதுமக்களும்,மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடி சிறப்பாக ஏற்பாடு செய்த பேர்ல் டிரஸ்ட் (PEART TRUST ) நிறுவனர் ராமச்சந்திரனையும் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்களையும் வாழ்த்தி சென்றனர்.

