திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் வராமல் கணவன் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
பொன்மலை போலீசார் விசாரணை
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனியார் மருந்து கம்பெனியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி டான் போரன் (வயது 25) என்ற மனைவியும், ஆண், ,பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று டான் போரன் தனது கணவன் புஷ்பராஜ்யிடம் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பொருட்களை வாங்குவதற்கு பஜாருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதற்கு புஷ்பராஜ் இன்றைக்கு எனக்கு வேலை இருக்கிறது. நாளை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு மணப்பாறைக்கு கிரிக்கெட் விளையாட சென்று விட்டார். பிறகு மதியம் வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போட்டு இருப்பது கண்டு கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து ஜன்னல் வழியாக புஷ்பராஜ் பார்த்தபோது மனைவி டான் போரன் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி புஷ்பராஜ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது டான் போரன் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து உடனடியாக பொன்மலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பொன்மலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய டான் போரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

