ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவம் இன்று தொடக்கம்.
அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உலக பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று மாலை திருநெடுந்தாண்டக உற்சவத்துடன் தொடங்கியது.
இன்று (20ந்தேதி) முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி நடை பெறுகிறது.
பல்வேறு சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று இரவு 7 மணிக்கு திரு நெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கியது.
பகல் பத்து உற்சவம் தொடங்கியது:
இதையடுத்து தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், முதல் 10 நாட்கள் நடைபெறும் பகல்பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது.
பகல்பத்து உற்சவத்தின் முதல்நாளான இன்று காலை 7 மணிக்கு தனுர் லக்னத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் புறப்பாடு கண்டருளினார். 7.45 மணிக்கு அர்ச்சுன மண் டபம் சென்றடைந்தார். அங்கு ஆஸ்தானமிருந்தபடி அரையர், பொதுஜன சேவை சாதிக்கிறார். இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதுபோல, பகல்பத்து நாட்க ளில் நாள்தோறும் சிறப்பு அலங் காரத்தில் காலை மூலஸ்தா னத்தில் இருந்து புறப்பாடு கண்டருளும் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு சேவை சாதிப்பார். அவரின் முன்பு அரையர்கள் நாலாயிர திவ்விய பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடி இசைப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான மோகினி அலங்காரம் டிச.29ந் தேதி நடைபெறுகிறது.
30ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
இதைத்தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு வருகிற 30 ந்தேதி அதிகாலை 5.45 மணிக்கு
நடைபெறுகிறது. முன்னதாக, மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளிமாலையுடன் தனுர் லக்னத்தில் புறப்பாடு கண்டருளும் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடப்பார்.
சொர்க்கவாசல் திறப்பன்று இரவுமுதல் அதிகாலைவரைபல லட்சம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவரங்கத்துக்கு வருகை தருவர். அன்றிரவு முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.
ராப்பத்து நாட்களில் மதியம் 12 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்ட ருளும் நம்பெருமாள், திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளி சேவை சாதிப்பார். ஜன.9 ந்தேதி இயற்பா சாற்றுமறையுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், அறநிலையத் துறை உடன் இணைந்து பக்தர்களுக்கு தேவையான குடிநீர் குடிநீர் வசதி, தங்கும் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற் பாடுகளை செய்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஶ்ரீரங்கம் கோயில் ரங்கவிலாச மண்டபம் அருகில் திருச்சி மாநகர காவல்துறைசார்பில் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு புறக்காவல் நிலையத்தை நேற்று காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.
கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், சுந்தர் பட்டர், துணை ஆணையர்கள் ஈஸ்வரன், சிபி, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சீதாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியத்தை தொடர்ந்து ஶ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

