பேராசிரியர் அன்பழகனின் 103 வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு :
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேராசிரியர் அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை .
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்வில் மாநகரக் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் பகுதி செயலாளர்கள் மோகன்,ஒட்டப்பட்டு தர்மராஜ்,பொதுக்குழு உறுப்பினர்,கவுன்சிலர் kkk கார்த்தி மற்றும் மாவட்ட, மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

