அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம்
அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசு வெல்லும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியில் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் பெற்ற பரிசுடன் அவர்களின் புகைப்படம் அறிவிப்பு பலகையில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இயக்குநர் அவர்களின் 03.12.2025 நாளில் வெளிவந்த செயல்முறைகளை கண்டு மனம் மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில்.. அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுதல் சார்பாக தேதிகள் வெளியிடப்பட்டு வருவதை கண்டு மனம் மிகவும் வேதனை அடைகிறது

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்தப்படும் பாரதியார் தின குடியரசு தின விளையாட்டு (புதிய விளையாட்டுகள், தடகளம் மற்றும் பழைய விளையாட்டுகள்) போட்டிகள் கடந்த காலங்களில் பள்ளி வேலை நாட்களில் போட்டிகள் நடைபெற்று வந்தது.
சமீபகாலமாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் பள்ளி விடுமுறை நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் செவி சாய்க்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.BDG-திருவண்ணாமலை -20.11.2025 (வியாழக்கிழமை ) முதல் 25.11.2025 (செவ்வாய்க்கிழமை) வரை.
திருச்சி – 66- ஆவது குடியரசு தின குழு போட்டிகள் 03.12.25-முதல் 08.12.2025 வரை ((புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரை) போட்டிகள் நடைபெற்றது.
நடைபெற இருக்கும் போட்டிகள் :
தேனி மாவட்டம்- குத்துச்சண்டை 04.01.2026 முதல் 07.01.2026 போட்டி (ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை).மற்றும்
திருநெல்வேலி மாவட்டம் – நீச்சல் போட்டி 22.01.2026 முதல் 25.1.2026 (வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை) வரை.
விடுமுறை நாட்களிலும் போட்டிகள் நடைபெறுவதால் அணி மேலாளர்கள், நடுவர்கள் மற்றும் மாணவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிப்படைகிறார்கள். மாணவர்கள் விடுமுறை நாட்களில் உயர் கல்விக்கான சிறப்பு வகுப்புகள் செல்ல உள்ளதால் மாணவர்களை போட்டிக்கு அழைத்து செல்வதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
இது போன்ற நிகழ்வுகளை தமிழக அரசும், துணை முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி அவர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கருதுகிறோம்.

ஆகவே அரசு விடுமுறை நாட்களில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை தவிர்த்தும். நடைபெற உள்ள மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகளை பள்ளி வேலை நாட்களில் போட்டிகள் நடைபெற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என
எஸ். சங்கரப் பெருமாள்,மாநிலத் தலைவர்.மா.மு.சதீஸ்,மாநில பொதுச் செயலாளர்,என். சுரேஷ்குமார்,மாநில பொருளாளர்,
எஸ்.செல்வகுமார்,
மாநில செயல் தலைவர்
மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

