Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலை கைவிடக் கூறிய மனைவியை கொடுமைப்படுத்திய திருச்சி ஐடி ஊழியர்.திருமணமான 3வது மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்.

0

'- Advertisement -

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நாகராஜ் சத்தியவதி மகள் மஞ்சு பிரியதர்ஷினி (வயது 27) என்பவருக்கும் திருச்சி மாவட்டம் உறையூர் சாய்ராம் விஜயலட்சுமி மகன் கமலக்கண்ணன் (வயது 35) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருப்போர் ஏற்பாட்டின் பேரில் திருமணம் நடைபெற்றது.

கமலக்கண்ணன் சென்னையில் ஹெச் சி எல் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனால் புதுமண தம்பதிகள் சென்னையில் ஒட்டியம்பாக்க்கம் பகுதியில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணமான மூன்றாவது மாதத்தில் மஞ்சு பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்போது மஞ்சு பிரியதர்ஷினியின் பெற்றோர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் தாம்பரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஐடி ஊழியர் கமலக்கண்ணனுக்கு கௌரி என்பவர் உடன் இருந்தார். தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்த மஞ்சு பிரியதர்ஷினி கணவர் கமலக்கண்ணனிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கௌரி உடனான தொடர்பை துண்டிக்க மஞ்சு பிரியதர்ஷினி வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த மஞ்சு பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணமான மூன்று மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது.

 

விசாரணையின் அடிப்படையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிய மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கமலக்கண்ணனை பெரும்பாக்கம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.