திருச்சி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சாலையில் கணினியை உடைத்துப் போராட்டம்.
இ பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி
திருச்சி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சாலையில் கணினியை
உடைத்துப் போராட்டம்.
திருச்சியில் இன்று பரபரப்பு:
நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,
இ -பைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
வழக்கறிஞர்கள்
கடந்த இரண்டாம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் சில திடீரென கம்ப்யூட்டர் மானிட்டரை நடுரோட்டில் தூக்கிப்போட்டு உடைத்தனர்.இதனால் நீதிமன்றம் முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்கு
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சி. முத்துமாரி தலைமை தாங்கி பேசினார்.
துணைத் தலைவர் வடிவேல்சாமி, பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார்,
பொருளாளர் சதீஷ்குமார்,
இணை செயலாளார் விக்னேஷ்,
குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார்,பிரபு, நகர வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொருளாளர் சுதர்சன்,
வழக்கறிஞர் சரவணன்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஜெயராமன், வெங்கடேசன், முன்னாள் துணைத்தலைவர் மதியழகன்,முன்னாள் செயலாளர் சுகுமார்,மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.முத்துகிருஷ்ணன் , மதனி, வீரமணி,ஆரோக்கியசாமி, ஐ.செல்வராஜ், லோகநாதன் திவாகர் சுகுமார் அப்துல் சலாம் , முருகானந்தம் கங்காதரன், சந்திரமோகன் காஜாமைதீன் மோனிகா மங்கலம்,

எழிலரசி, சிவா கிருபா ,அன்பில் காமராஜ், உறையூர் சந்திரமோகன், கேசவன் ராஜ கணேஷ்
முத்துக்குமார் பாக்கியநாதன் ஐ.செல்வராஜ்,ரிஷிகேசன், கே.செல்வராஜ் , தியாகசுந்தரம்
வசந்தன் நெப்போலியன்,உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

