கலைஞருக்குப் பிறகு இரட்டைப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், காட்டூர் பொதுக்கூட்டத்தில் ‘ அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
கலைஞருக்குப் பிறகு இரட்டைப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பது தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்றும் எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்
48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம்,மாநகரத்திற்குட்பட்ட காட்டூர் பகுதி கழகத்தின் சார்பில் ஆயில்மில் பேருந்து நிறுத்தம் கலைஞர் சிலை அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு காட்டூர் பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான நீலமேகம் தலைமை வகித்தார
பொதுகூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் காட்டூர்பகுதி 43வது வட்டச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்
இந்த பொதுக்கூட்டத்திற்குசிறப்பு விருந்தினர்களாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றியதாவது நமது தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு வந்துள்ளதாகவும் மேலும் இந்த தொகுதியின் உடைய சட்டமன்ற உறுப்பினராக காட்டூர் பகுதியான வாடு 36, 37, 38 ,43 வார்டுகளில் என 2021 முதல் 2026 வரை சாலை அமைத்தால் நியாய விலை கடை கட்டுதல் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டுதல் புதிய கழிப்பிடம் கட்டுதல் தெருவிளக்கு அமைத்தல் என 67.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் நான் முதன் முதலில் 2016ல் திருவரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பொழுது நான் என் மனதில் ஏற்றிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான் திருச்சி எனது சொந்த ஊர் திருவரம்பூர் எனது சொந்த வீடு என்பது மட்டும் தான் என்றார் மேலும் இன்று நம்முடைய ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியம் என்றால் நீங்கள் அளித்த ஒரு வாக்கினால் தான் இன்று தமிழகம் முழுவதும் 20 லட்சம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பசியில்லாமல் காலை உணவு உட்கொண்டு பள்ளிக்குச் சென்று கல்வி பயின்றுவருவதாகவும். எனவே உங்கள் ஓட்டு மதிப்பு என்பது மகளிர் விடியல் பேருந்து மூலம் பயணம் இன்று ஆய்வு அறிக்கையின் மூலம் மகளிர் ஐம்பதாயிரம் ரூபாய் சேமித்து வருவதாகவும், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலம்
கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மாதம் பெற்று 12 லட்சம் பிள்ளைகள் இதன் மூலம் பயன் பெற்று வருவதாகவும் எனவே மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும் யாருக்கு வாக்களித்தால் நமது வாழ்வாதாரம் மேம்படும் என்றும் யோசித்து தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் மேலும் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கில் கலைஞருக்கு பிறகு இந்தியாவிலேயே 11.19 சதவீதம் அதிகப்படுத்தி காட்டியது நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்றும் இதை நாம் சொல்லவில்லை நமக்கு பணம் வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசுதான் சொல்கிறது என்றும் இதை நாம் அனைவரும் உற்று நோக்கி கவனிக்க வேண்டும் இவ்வாறு திட்டங்களை முதல்வர் கொண்டு வருவதற்கு அவருக்கு பக்க துணையாக இருக்கும் தமிழக துணை முதல்வரின் பிறந்த நாளை தான் நாம் இன்று கொண்டாடி வருகிறோம் என்றும் எனவே அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் என்றும் எடுத்துரைத்தார்

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் , முப்பத்தி ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொதுக்குழு உறுப்பினருமான kkk கார்த்திக், மற்றும் மாவட்ட நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

