Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .

0

'- Advertisement -

லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 

திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு. ஓய்வுபெற்ற வங்கி மேலாளா். இவரது தந்தை பெயரில், கரூா் மாவட்டம், நெய்தலூா் காலனி ராஜன் நகரில் அரிசி ஆலை உள்ளது. இந்த அரிசி ஆலைக்கு மின் இணைப்பு செல்லும் வழித்தடத்தில் மின்வயா்கள் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் இருந்தது.

எனவே, இதனை மாற்றம் செய்து தர குளித்தலை மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று உதவிப் பொறியாளா் டி.ஆா். நாராயணனை அணுகினாா். அப்போது, மின் கம்பம் நட்டுப் பணியை முடிப்பதற்கு நாராயணன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் தரவிரும்பாத சுந்தரராஜு, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து கடந்த 10.8. 2011அன்று சுந்தர்ராஜுவிடமிருந்து ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது நாராயணனை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், டி.ஆா்.நாராயணனுக்கு, லஞ்சம் கேட்ட குற்றத்துக்காகவும், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காகவும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து சிறப்பு நீதிபதி நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

 

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பு அளித்தாா். மேலும், அபராதத்தை தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.