Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவண்ணாமலையில் மணக்கும் திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி .1.30 லட்சம் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணிதயாரிப்பு.

0

'- Advertisement -

திருவண்ணாமலையில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் வடக்கு மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்காக 9,000 கிலோ மட்டன் மற்றும் 6,000 கிலோ அரிசியுடன் பிரியாணியை திருச்சி கே எம் எஸ் ஹக்கீம் பிரியாணி தயாரித்து உள்ளது.

 

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவின் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புகள் மண்டலந்தோறும் நடத்தப்படுகிறது. 29 திமுக மாவட்டங்களைச் சேர்ந்த1.30 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும் வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது.

 

இந்த மாநாட்டில் பங்கேற்கும் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 

குடிநீர், கழிப்பறை வசதிகள், மருத்துவ சிகிச்சை மையங்கள், நொறுக்கு தீனிகள் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1,000-க்கும் மேற்பட்ட மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன

5,000 லிட்டர் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது

200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு உணவுக்காக சூடான பிரியாணி வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனி தனி டப்பாக்களில் பிரியாணி வழங்கப்படுகிறது.

இரவு உணவை தயார் செய்ய திருச்சியில் புகழ்பெற்ற  KMS ஹக்கீம் பிரியாணி நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது.

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் பிரியாணி நன்றாக இருந்ததால் அதை செய்த திருச்சி ஹக்கீம் பிரியாணி நிறுவனத்துக்கே இம்முறையும் துணை முதல்வர் உதயநிதியே தற்போதும் ஆர்டர் கொடுத்துள்ளார்.

40,000 பேருக்கு 6,000 கிலோ அரிசியும் 9,000 கிலோ மட்டனும் போடப்பட்டுள்ளது.

10-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சுமார் 2,000 ஆடுகள் வாங்கப்பட்டன.

பேக்கிங்குக்கு 400 முதல் 500 பேர் வரை பணியில் ஈடுபட்டுள்ளனர்

சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்யப்பட்டுள்ளது.

ஒருவருக்கு 1 கிலோ பிரியாணி, 150 கிராம் மட்டன் வழங்குவதற்கான பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

பேக்கிங் செய்யப்பட்டுள்ள பிரியாணி டப்பாக்கள் அனைத்தும் இளைஞரணி நிர்வாகிகளின் வாகனங்களில் பகுதி வாரியாக கொண்டு போய் வைக்கப்படும்.

சிற்றுண்டி- ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் முந்திரி, ஆரஞ்சு ஜூஸ், பிஸ்கெட், கடலை மிட்டாய், மிக்சர், காரப்பொரி ஆகியவை தயாராக வைக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.