Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக அமல்படுத்தியதை திரும்ப பெற வேண்டும்.

மருந்து மற்றும் மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது. மருந்துவிலையை ஏழை, எளிய மக்களை மனதில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். சுகாதாரத்துக்காக மத்திய அரசு ஒதுக்கக்கூடிய நிதியை மேலும் உயர்த்த வேண்டும்.

 

மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பொருந்தக்கூடிய சட்டமான விற்பனை அபிவிருத்தி பணியாளர்கள் சட்டம் எஸ்.பி.இ ஆக்ட் 1976 மாற்றக் கூடாது.

 

மருத்துவ பிரதிநிதிகளுக்கு நிலையான வேலை விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

 

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு நிறுவனங்கள் போனஸ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

 

குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் இன்று திங்களன்று

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் விவேகானந்தன், துணை பொதுச் செயலாளர் திலீப் மேனன், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.

இதில் மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.