Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: இந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .

0

'- Advertisement -

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்து முன்னணி அமைப்பின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கம் கிருஷ்ணாலயா மினி ஹாலில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். திருச்சி கோட்டச் செயலாளர் போஜராஜராஜன் முன்னிலை வகித்தார்.

மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, மண்டல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இன்று நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழ் வருமாறு :-

 

*தீர்மானம் -1*

 

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்று இந்து முன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறது.

 

இந்து முன்னணி சட்டரீதியாகவும் இதற்கு தீர்வு காண வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் கார்த்திகை தீபமானது தீபத் தூணில் தான் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மூன்று முறை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியும் கூட இந்த தமிழக அரசு யாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பை சற்றும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. இது இந்துக்களின் மனதை பெருமளவில் பாதித்துள்ளது ஆகவே வருகின்ற காலத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இந்துக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

*தீர்மானம் -2*

 

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு வர கூடிய பக்தர்களை மதித்தும் அவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

 

108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற முதல் திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் வருகின்ற மார்கழி மாத காலத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. அதேபோல பகல் பத்து இராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆண்டாண்டு காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதே போன்று கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர்களை நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது . சென்ற வருடங்களில் இந்த நிகழ்ச்சியின் போது கோவிலில் நடைபெறக்கூடிய கோவிலின் அலங்காரப் பொருட்கள் மற்றும் கோவிலின் மின்விளக்குகள் போன்ற விஷயங்களில் காண்ட்ராக்ட் மாற்று மதத்தினருக்கு தருவதாக செய்தி வருகிறது. இதனை முழுமையாக இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

 

*தீர்மானம் 3*

 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் பக்தர்களை அவமானப்படுத்துவதை கண்டித்து.

 

திருச்சியில் பிரசித்தி பெற்ற ஸ்தலமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூட அதிகமான மாரியம்மன் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சமீப காலங்களாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருக்கக்கூடிய அறநிலையைத் துறை கண்காணிப்பாளர் உட்பட அனைத்து ஊழியர்களும் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களை மதிப்பதில்லை மிகவும் கேவலமாகவும் அவர்களை அவமதிக்கக் கூடிய வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி மனதை புண்படுத்தி வருகிறார்கள் இதனை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது வரும் காலங்களில் தொடர்ந்து இந்த போக்கு நடைபெற்று வந்தால் இந்து முன்னணி அறநிலையதுறைக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டி வரும் ஆகவே உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் இதில் கவனம் கொடுத்து பக்தர்களை மதிப்பதற்கு கோவில் பணியில் இருந்து வரும் ஊழியர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

*தீர்மானம்- 4*

 

வருகின்ற காலத்தில் இந்து முன்னணி கிளை அமைப்புகளுக்கு திருச்சி மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

 

இந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 45 ஆண்டு காலமாக இந்து சமுதாயப் பணியில் இருந்து வருகிறது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கோவில்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தொடர்ந்து போராட்டம் நடத்தி தீர்வு காணக்கூடிய அமைப்பாக இருந்து வருகிறது இதனுடைய வளர்ச்சிக்காக இந்து முன்னணியின் கிளை அமைப்புகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது அந்த அமைப்புகளை திருச்சியில் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.