திருச்சி: தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நீலகண்டன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது .
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது .

போராட்டத்துக்கு திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயலாளருமான சே. நீலகண்டன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .
இந்தப் போராட்டத்தில் நாகராஜன், குமாரவேல், உ துமான் அலி ,நவநீதன ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன்,தமிழ்நாடு ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

உண்ணாவிரதத்தில் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் முதுகலை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இடையான ஊதிய வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட
பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

