திருச்சியில் இருந்து சென்னை வரை 550 கி.மீ. நடைபெறும் வந்தே மாதரம் தேச பக்தி யாத்திரையை தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
150 -வதுஆண்டு விழா :
திருச்சியில் இருந்து சென்னை வரை வந்தே மாதரம் தேச பக்தி யாத்திரையை
தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

வந்தே மாதரம் தேசிய பாடல் எழுதி பல ஆண்டுகளை கடந்து 2025 ஆம் ஆண்டில் 150 வது ஆண்டு நிறைவு பெறுகின்ற முழுமையான வரலாறுகளை தாங்கிய வந்தே மாதரம் முழக்கம் பாடலின் வரலாறு குறித்து வந்தே மாதரம் திருச்சி தெப்பக்குளம் காந்தி சிலையில் இருந்து சென்னை வரை நடக்கிறது.
திருச்சியில் மாவட்ட சமூக நல ஆர்வலர் கருப்பையா மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

திருச்சியில் இன்று தொடங்கிய யாத்திரையை தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்சன் பூக்கடை பன்னீர்செல்வம்,
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தின் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் ரங்கநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ் கலந்து கொண்டார்.
இந்த யாத்திரை 25 நாட்கள் 550 கி.மீ. தூரத்திற்கு நடக்கிறது வருகிற 27-ந் தேதி சென்னை கிண்டி காந்தி மண்டபம் அருங்காட்சியக வளாகத்தில் நிறைவு பெறுகிறது.

