Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள். தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநகரச் செயலாளர் மதிவாணன் வழங்கினார்.

0

'- Advertisement -

மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள். தெற்கு மாவட்ட திமுக சார்பில்

மாநகரச் செயலாளர் மதிவாணன் வழங்கினார்.

தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி   தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர தொழிலாளர் அணி சார்பாக திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் அமைந்துள்ள சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம் டாக்கர் சந்தில் மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் எஸ். வெங்கடேஸ்வரன் மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ. பி.ரகுநாதன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர்.

உணவு மற்றும் சீருடை வழங்கி மாநகரக் திமுக செயலாளர் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்

வண்ணை அரங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

இந்நிகழ்வில் பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு மற்றும் தொழிலாளர் அணி மாவட்ட பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் திமுக திமுகநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

முடிவில் மாநகர தலைவர் ராஜவேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.