திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஒதுக்கீடு செய்த ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டி பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தினர் கோரிக்கை.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில்
ஒதுக்கீடு செய்த ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டி பாரதிய ஆட்டோ ரிக்ஷா
ஓட்டுநர் சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை.
பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி பொன்மலை மண்டல
உதவி ஆணையர் சண்முகத்திடம், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்து மாணிக்க வேலன், கண்டோன்மெண்ட் பாஜக மண்டல் தலைவர் கார்த்திக் தலைமையில்

பாரதிய ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் அம்பேத் சாக்ரடீஸ், மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

நாங்கள் பஞ்சபூர் புதிய பேருந்து நிலையத்தில் எங்களது பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 40 ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு அனுமதி கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்தோம். தங்களின் ஆய்வுக்குப் பிறகு ஒன்றாவது
பே ஜில் 14 ஆட்டோக்களும், இரண்டாவது பேஜில் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மீதமுள்ள 16 ஆட்டோக்களுக்கு நான்கு மாதமாக அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆகவே எங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது சம்பந்தப்பட்ட பஞ்சாபூர், எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 7ஆட்டோக்களுக்கான ஆவணங்களும், மத்திய பேருந்து நிலையத்தைச் சேர்ந்த 9 ஆட்டோ களுக்கான ஆவணங்கள் அனைத்தும் சரியான முறையில் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த 16 ஆட்டோக்களுக்கும் உடனடியாக அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மனு அளித்த போது பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் காதர் மைதீன் மற்றும்
திரளான ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.

