பாலியல் வன்முறை கொலை வரை செல்ல காரணம் போதைக்கு அடிமையானவர்கள் தான்.திருச்சியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேச்சு .
திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள அல்ஹுதா கல்வி நிறுவனங்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
திருச்சி விமான நிலையம் காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை திருச்சி மாநகர கே.கே. நகர் போலீஸ் சாரக உதவி ஆணையர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி, விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.


இந்த பேரணியின் போது மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி பேசுகையில், திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல் போதை பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் அவர்களாக பார்த்து திருந்த வேண்டும். அத்தகைய போதை பழக்கத்திலிருந்து வெளியே வர அவர்கள் முயற்சி செய்தால் தான் சாத்தியமாகும்.
போதைக்கு அடிமையானவர்கள் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு, கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எல்லைப் பகுதியில் போதை பொருட்கள் ஊடுருவலை தடுக்க முடியும். இதற்கு தமிழக அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த பேரணியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

