ஆக்ரோசமாக பணியில் இருந்த பெண் கண்காணிப்பாளர் சென்றபின் பாஸ் இல்லாதவர்களையும் கூட்டத்திற்குள் அனுமதித்த புஸ்ஸி ஆனந்த் .இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.பல்வேறு கட்டுப்பாடுகளோடு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும் கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் 5 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டது.
ஆனால் விஜய்யை பார்க்கும் முனைப்பில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் நடைபெறும் பகுதியில் குவிந்தனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என அடையாள அட்டை இல்லாதவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் பாஸ் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் நடைபெறும் பகுதியில் குழுமியிருந்த நிலையில் அவர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக கடிந்து கொண்டார்.

குறிப்பாக உங்களால் பலபேர் இறந்துவிட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு நீங்கள் கட்டளையிட வேண்டாம் என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆன்நத், காவல் கண்காணிப்பாளர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் பாஸ் இல்லாத நபர்களும் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்..
புங்லி ஆனந்திடம் கராராக பேசிய கண்காணிப்பாளர் ஈஷா சிங் அவரது குடும்பத்தினர் யார் என்பதையும் பார்க்கலாம்.
தவெக பொதுக் கூட்டத்தில் பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே விடுமாறு ஆனந்த் கூறிய போது கோபமடைந்த எஸ்பி ஈஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு சொல்லித் தருகிறீரா?” என ஆவேசமாக கேட்டார். மேலும் இவர் கத்திக் கொண்டிருந்த கேப்பில் உள்ளே நுழைந்தவர்களை பிடித்து வெளியே அனுப்பினார்.
அது போல் புஸ்ஸி ஆனந்த் கட்சியினர் மத்தியில் மைக்கில் பேசினார். அதாவது முண்டியடிக்கிறார்கள், தொண்டர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என புஸ்ஸி ஆனந்தை போலீஸார் அழைத்து வந்த நிலையில் அவரோ மைக்கில், “பொறுமையாக இருங்க எல்லாரையும் அனுப்புறோம்”னு சொன்னுதான் தாமதம், அவரிடம் இருந்து ஈஷா சிங் மைக்கை பறித்துக் கொண்டார்.
இந்த நிலையில் ஈஷா சிங்கின் குடும்பமே ஐபிஎஸ் படித்தவர்களாம். அது போல் ஈஷா, அவரது தாய், தந்தை எல்லாரும் வழக்கறிஞருக்கும் படித்திருக்கிறார்களாம். ஈஷாவின் தந்தையும் தாயும் ஏழை மக்களுக்கு நீதியை பெற்று தருவதற்காகவே ஐபிஎஸ் பதவிகளில் இருந்து விலகிவிட்டனர்.
ஈஷாவின் தந்தை யோகேஷ் பிரதாப் சிங் யார் என்பதை பார்க்கலாம். 1985 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் முடித்தவர். இவருக்கு வர்தாவில் முதல் பணி கிடைத்தது. இதையடுத்து அவர் மாவட்ட காவல்துறை, உணவு நிர்வாகம், சிபிஐ, ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்களாம்.
தனது பணிக்காலத்தில் மிகவும் நேர்மையான அதிகாரியாக இருந்த யோகோஷ் சிங், நிறைய ரெய்டுகளை நடத்தியுள்ளாராம். சிபிஐ-யில் பணியாற்றிய போது யூஎஸ் 64 எனும் முறைகேடு குறித்து விசாரித்துள்ளார்.
காவல்துறையில் பரவலாக இருந்த ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் விதமாக, ஒய்.பி. சிங், 2003 ஆம் ஆண்டு “Carnage by Angels” என்ற தனது நாவலை வெளியிட்டார். இளநிலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது இதை எழுதிய அவர், புத்தகம் வெளியான பிறகு தனது பணியைத் துறக்க நேர்ந்தது. அவர் பிப்ரவரி 2004 இல் ஓய்வு பெற்றார்.
அரசாங்கம் ஏழு ஆண்டுகளாக தனது வருங்கால வைப்பு நிதியை வழங்காததைக் காரணம் காட்டி, நவம்பர் 2011 வரை மும்பையின் நரிமன் பாயிண்டில் உள்ள தனது 750 சதுர அடி குடியிருப்பைக் காலி செய்ய சிங் மறுத்தார். அதன் பிறகு, அவர் ஒரு வழக்கறிஞராகவும் சமூக ஆர்வலராகவும் பணியாற்றத் தொடங்கினார். தற்போது மும்பையில் ஊழல் தொடர்பான பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக பணிபுரிவதுடன், ஊழல் மற்றும் சட்டம் குறித்து விரிவுரைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
2004 ஆம் ஆண்டு, சுங்கம் மற்றும் வருமான வரித் துறைகளில் நடக்கும் ஊழல்களைப் பற்றிய “Vultures in Love” என்ற தனது இரண்டாவது நாவலை சிங் வெளியிட்டார். அவரது முதல் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “கியா யாஹி சச் ஹை” (Kya Yahi Sach Hai) திரைப்படம், 2010 இல் கலிபோர்னியா திரைப்பட விருதுகளில் “கதை அம்சத் திரைப்படப்” பிரிவில் வெள்ளி விருதை வென்றது.
ஒரு விமர்சகர் இத்திரைப்படத்தை, “‘கியா யாஹி சச் ஹை’ மிகவும் உணர்ச்சிபூர்வமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலுவான படம்” என்று பாராட்டினார். 2011 டிசம்பரில், மும்பையில் நடந்த ஒரு பொதுத்திரையிடல் நிகழ்வில் எல்.கே. அத்வானி, நிதின் கட்கரி, மேனகா காந்தி, விஜய் கோயல் மற்றும் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பல பிரபல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பழம்பெரும் அரசியல்வாதிகளான பிரகாஷ் ஜவடேகர், முரளி தியோரா, ராஜீவ் சுக்லா மற்றும் ஜகதம்பிகா பால் ஆகியோரும் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். இத்திரைப்படத்தின் “கியா யாஹி சச் ஹை” இசைக் குறுந்தகடை கிரிக்கெட் தலைவர் மகேந்திர சிங் தோனி வெளியிட உதவினார்.
இருப்பினும், இந்தப் படம் பின்னர் ஐனாக்ஸ் நரிமன் பாயிண்டில் உள்ள ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் இருந்து அகற்றப்பட்டது. உரிமம் தொடர்பான சட்ட மீறல்களுக்காக காவல்துறை பதிலடி கொடுக்கும் என்று திரையரங்கம் அஞ்சியதே இதற்குக் காரணம் என்று சிங் குற்றம் சாட்டினார்.
பிப்ரவரி 2012 இல், நகராட்சி ஆணையர் சுபோத் குமாரின் பணி நீட்டிப்புக்கு ஒய்.பி. சிங் எதிர்ப்புத் தெரிவித்தார். இது அகில இந்திய சேவை விதிகளை மீறிய செயல் என்றார். அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரக் குழுவின் உறுப்பினருக்கு சுபோத் குமார் முன்பு சலுகை காட்டியதாகவும், இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விஷயத்தில் அதிகாரிகள் பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும் என்றும் சிங் வலியுறுத்தினார்.
ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல், போவாய் நில மோசடி மற்றும் லாவாசா டவுன்ஷிப் வழக்கு போன்ற பல முக்கிய ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடுவதிலும் ஒய்.பி. சிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்

