ரூ.1020 ஊழல் குறித்த அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு சப்ப மேட்டரு சால்ட் வாட்டரு என அசால்டாக அமைச்சர் நேரு பதில் சொல்ல காரணம் இதுதான் ….
‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
அமைச்சர் நேருவின் பதில்
கூட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ. 1,020 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி, அமலாக்கத்துறை (ED) இரண்டாம் முறையாகத் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பூத் கமிட்டிகளைச் சீரமைப்பது மற்றும் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

கூட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ. 1,020 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி, அமலாக்கத்துறை (ED) இரண்டாம் முறையாகத் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று மிகச் சுருக்கமாகப் பதில் அளித்துவிட்டு, அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றார். அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்த விவரமான பதிலை அவர் அளிக்கவில்லை..

ஆனால் இது குறித்து அமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில் அமைச்சருக்கு வேண்டாத ஒரு சிலர் முறைப்படி அமைச்சர் ரூ.1020 கோடி பணத்திற்கு வரிகள் கட்டிய டாக்குமெண்டை ஏமாற்றப்பட்டது என கூறி எடுத்துச் சென்று அமலாக்கத் துறையினரிடம் கொடுத்துள்ளனர் . அனைத்து பணங்களும் முறைப்படி கணக்கில் காட்டப்பட்டுள்ளது எனவே எங்கள் அமைச்சருக்கு எந்தவித பயமும் கிடையாது . மடியில் கனமில்லை அமலாக்கத்துறைக்கு பயமில்லை . அனைத்தையும் சட்டப்படி சந்தித்து தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை விரைவில் நிரூபிப்பார் எங்கள் அமைச்சர் என கூறினார் அந்த நேருவின் விசுவாசி .

