திருச்சியில் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாமை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி திமுக இளைஞரணி சார்பில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாநகராட்சி மேயர், மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர்.தொடங்கி வைத்தனர்.இந்த முகாமில்.ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.


இந்த நிகழ்வில் மாநில மாணவரணி துணை செயலாளர் பி.எம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டான்லி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் ஆனந்த் , ஜங்ஷன் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

