திருச்சி ஹவுரா .எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்.ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி.
திருச்சி ஹவுரா .எக்ஸ்பிரஸ் ரயிலில்
ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி.
தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்த் யாதவ்,உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் குழுவினர் செல்வராஜா, இளையராஜா ,ஜெயவேல், பிரசாந்த் ஆகியோர் கொண்ட படை திருச்சி ரயில் நிலையத்தில் வரும் ரயில்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


திருச்சி வழியாக வரும் ரயில்களில் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகளில் அதிரடியாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது ஹவுரா – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு 8 -வது நடைமேடைக்கு வந்தது.அப்போது போலீஸ் படை அதிரடியாக சோதனை நடத்தியது.சோதனையின் போது யாரும் உரிமை கோர வராத நான்கு ட்ராவல் பேக்குகள் கிடந்தது.அதைக் கைப்பற்றி போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.அப்போது அந்தப் பேக்குகளில் 36 கிலோ எடை கொண்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.அவற்றை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்து திருச்சி வரும் ரயில்களில் கஞ்சா போன்ற கடத்தல் பொருட்கள் இருக்கிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

