திருச்சி மாநகராட்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி டிசம்பர் 6 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான பின்வரும் பகுதிகளில் நாளை டிசம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை பாதுகாப்பாக சேகரித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளது .
பகுதிகள் விவரம்: மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்கா நகர், வி.என்.நகர், தென்றல் நகர், கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் இ.பி.காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர், ெரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலகல்கண்டார்கோட்டை செக்ஸன் ஆபீஸ், நாகம்மை வீதி, பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்த நகர், எல்.ஐ.சி., விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், பாலாஜிஅவென்யூ, . தேவிபள்ளி மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.

