கல்லூரி மாணாக்கர்களுக்கான உலக மண் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு.
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி செயில் அரங்கில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச தலைமையில்; நடைபெற்றது எதிர்வரும் சமூதாயத்தை காக்க மண்ணையும் சுற்றுசூழலை இந்தலைமுறை பாதுக்காக்க வேண்டும் என்றும் “நமது மண் நமது வாழ்வு” என்ற நோக்குடன் கல்லூரி மாணாக்கர்கள் சமூகப்பணியின் வழியாக மேற்கொள்ள வேண்டுமென்று வழியறுத்தினார்.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தமது தொடக்கவுரையில் பல்லுயிர் சூழல் செழிக்க நாம் அனைவரும் மண்வளத்தை காக்க வேண்டுமென்று வலியுறுத்தினார் .
திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் (மினி உயிரியல் பூங்கா) காதர் பாஷா சமீப காலமாக நகரமயமாதல் பெருகி வருவதால் காடுகள் உயிரினங்கள் இயற்கை வளங்கள் மற்றும் வேளாண்மை என அனைத்திற்கும் அச்சுறுதல்களும் பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இயற்கை வளங்களை மாசுபாடுகளிலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாப்பதே மாற்றத்திற்கான வழிமுறையாகும் என்று சிறப்புரையாற்றினார் .உடன் திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் குணசேகர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் குடும்பம் தொண்டு நிறுவனம் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆஸ்வால்டு க்வின்டால் தனது சிறப்புரையில் நீடித்த நிலைத்த விவசாயம் இயற்கை விவசாயம் பல்லுயிர் சூழலின் பாதுகாப்பு மூலம்தான் மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்று கருத்துரை வழங்கினார்.

வாய்ஸ் அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் கிரகோரி மண் வளம் காக்க நெகிழிகளை தவிர்போம் இயற்கை விவசாயம் காப்போம் என வலியுறுத்தி விதை பந்துகளையும் துணி பைகளையும் மாணவர்களுக்கு கொடுத்து அதன் சுற்று சூழலின் முக்கியத்துவத்தை விவசாயகளிடத்திலும் மக்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் கூறினார்.
இறுதியாக வனத்துறை உதவியுடன் மாணாக்கர்கள் செப்பர்டு கிராமங்களில் மரக்கன்றுகளை சமூக காடுகள் மற்றும் மரம் நடும் திட்டத்தினை இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் விளக்கினார்
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார்.
முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர்ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார். யசோதை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்; லெனின் மற்றும் ஜோசப் கிறிஸ்து ராஜா செய்திருந்தார் மேலும் தொழில் நுட்ப உதவிகளை இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் செய்திருந்தார் .
பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் சுற்று சூழல் குழுவின் மாணாக்கர்கள் 200 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

