திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.

வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தில் காவிரி ஆற்றில் இருந்து மணல்களை திருடிக்கொண்டு மூன்று பேர் செல்வதை போலீசார் பார்த்து உள்ளனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது அதில் 2 பேர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பிறகு போலீசார் மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருவெறும்பூர் சர்க்கார்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து,திருட்டு மணலையும்,
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேவதான பகுதியை சேர்ந்த திருப்பதி, சத்தியராஜ் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்..

