
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது.
திருச்சி பொன்மலை துர்க்கை அம்மன் கோவில் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர்
சந்துரு தலைமையில் ஆரியமங்கலம் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு பார்த்த பொழுது போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 24) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை போலீஸ்
சரகத்துக்கு உட்பட்ட ஹீபர் ரோடு ரேசன் கடை அருகில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த வெற்றி செல்வம் (வயது 20) என்ற வாலிபரை சப் இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து உள்ளார்.

