திருச்சி ஏபிசி (ABC) மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 45.36 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு.

திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஏபிபி (ABC) மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் தொழிலதிபா் உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 45.36 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சா்க்காா்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஆா். ரவி என்பவா் வயிற்று வலியால் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள ஏபிசி (அசூா்டு பெஸ்ட் கோ்) (ABC) மருத்துவமனையில் கடந்த 03.09.2022 அன்று சோ்ந்தாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அன்றிரவே ரவிக்கு குடலிறக்க அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா்.
தொடா்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சையின் போது, வயிற்றில் வைத்துத் தைக்கப்பட்ட மெஷ் எனக் கூறப்படும் வலை அமைப்பில் தொற்று ஏற்பட்டதால், ரவியின் உடல்நிலை மோசமானதால் 09.09.2022 அன்று மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து ரவி 10.09.2022 அன்று உயிரிழந்தாா்.
இதையடுத்து இவரது இறப்புக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கவனக்குறைவான சிகிச்சையே காரணம் எனக் கூறி, அதற்கு நிவாரணம் கேட்டு ரவியின் மனைவி மணிமேகலை உள்ளிட்ட குடும்பத்தினா் கடந்த 14.02.2024 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, மருத்துவமனை நிா்வாகம் மனுதாரருக்கு மருத்துவச் சிகிச்சைக்கான தொகை ரூ. 5.36 லட்சம், கவனக் குறைவான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 40 லட்சம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 25 ஆயிரத்தை 6 வாரங்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் ஏபிசி மருத்துவமனையும் ஒன்று . இது போன்ற தவறான ஆபரேஷன்கள் நடப்பதை அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் பேசி தீர்த்து விடுவதால் இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது .
இது போன்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றால் லட்ச கணக்கில் கறந்து விடுவது உண்டு..
தற்போது நீதிமன்றம் அறிவித்துள்ள இந்த தீர்ப்பால் இனி பொதுமக்கள் ஏபிசி மருத்துவமனை சிகிச்சைக்கு போவார்களா ?

