
திருச்சி பொன்மலைபட்டி
பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம்
பொன்மலை காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56)

பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 27-ந் தேதி காலையில் வேலைக்கு சென்றார்.
பின்னர் பணி இடத்திலிருந்து மாலையில் கிளம்பினார் .ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் .ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரது மனைவி பூங்கொடி பொன்மலை காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் பொன்மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து மாயமான ஆறுமுகத்தை தேடி வருகிறார்

