Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச .மருத்துவ முகாமை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

 

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச .மருத்துவ முகாமை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .

 

திருவெறும்பூர் தொகுதியில் மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை

அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள செல்வம் மஹால் கீழ அம்பிகாபுரம் திருமண்டபத்தில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

 

அண்ணாநகர், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜர் நகர், காட்டூர், அம்பிகாப்புறம் தகேஸ்வரி நகர், மிலிட்டரிகாலனி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பயன்பெற்றனர்.

இம் முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெற்றது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட்டது .

 

முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் மாநகரக் திமுகச் செயலாளர்

மு மதிவாணன். பகுதி செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் கே.கே.கே.கார்த்திக் , மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன், வட்ட செயலாளர்கள் ஆனந்த, சுரேஷ், விஸ்வநாதன், தவசீலன், தமிழ்மணி, மன்சூர், முருகானந்தம், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

.இம் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.