திருச்சி வரும் மாநில தலைவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக சிறுபான்மை பிரிவு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில். தீர்மானம்.
திருச்சி வரும் மாநில தலைவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக.சிறுபான்மை பிரிவு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில். தீர்மானம்.
திருச்சி வரும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அறிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.சார்லஸ் தலைமை தாங்கி பேசினார்.மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் இரா.அந்தோணிசாமி முன்னிலை வகித்து பேசினார்.
மாநகர் மாவட்ட சிறுபான்மை அணியின் பொதுச் செயலாளர் ஏ. எப்.ரஹ்மான் வரவேற்று பேசினார்.சிறுபான்மை அணி மாவட்ட பொருளாளர் ச.பஷீர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சிறுபான்மை அணியின் நிர்வாகிகள் வில்சன் தாமஸ்,மகபூப்ஜான், கிளிண்டன்,ஜகாங்கீர், ஜோசப் ஸ்டீபன், ஜோசப் பால்ராஜ்,ஜேம்ஸ் தாமஸ், ஜெயராஜ், ரூபன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.பின்னர் மக்களை சந்திக்க திருச்சிக்கு சுற்றுப்பயணம் வருகை தரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது என தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

