ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உலக அறிவியல் தின திருவிழா இன்று தொடங்கியது .
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உலக அறிவியல் தின திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான இன்று 26 .11.25 புதன்கிழமை நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களான பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் பேசுகையில்: அறிவியல் வாழ்க்கையில் இணைந்திருக்கிறது. அதனால் மாணவர்கள் தங்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து துறைகளிலும் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
காந்திகிராம பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் முரளிதரன் பேசுகையில்: தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள் மேலோங்கி இருப்பதை இளம் தலைமுறையினர் உணர்ந்து அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, அறிவியல் வினாடி – வினா, சுவரொட்டி தயாரித்தல், செயல்படும் மாதிரி தயாரித்தல், நீர் மேலாண்மை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
இப்போட்டிகளில் திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 1300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி அனைவரையும் வரவேற்று பேசினார் .
முடிவில் மூத்த துணை முதல்வர் முனைவர் ஜோதி நன்றி கூறினார்.
தொடர்ந்து நாளை வியாழக்கிழமை இரண்டாவது நாளாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது .

