உறையூரில் ஐடி கம்பெனி ஊழியர் கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 33)
ஐ டி ஊழியர் இவரது மனைவி சாந்தி (வயது 28) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.லோகநாதன் ஐடி கம்பெனியில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பணி செய்து வந்தார் .
இந்நிலையில் அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட லோகநாதன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் மனைவி சாந்தி உடனடியாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த உறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து லோகநாதனின் மனைவி சாந்தி உறையூர் காவல் நிலைய போலீஸில் புகார் கொடுத்தார் . அப்புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதன் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

