வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாமை அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாமை அதிமுக மாவட்ட செயலாளர் ஜெ.. சீனிவாசன் பார்வையிட்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி உறையூர் எஸ்.எம். எஸ். மேல்நிலைப்பள்ளி, உறையூர் பாண்டமங்கலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் தீவிர திருத்த முகாமை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் பார்வையிட்டார்.
தொடர்ந்து கட்சியினருக்கும் பாக முகவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் மற்றும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அறிவு அரவிந்தன்,
பெரம்பலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவலிங்கம்,எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் டி.ஆ.சுரேஷ்குமார், பகுதி அவைத் தலைவர் எம்.ஜெ.பி. வெஸ்லி,
வட்டச் செயலாளர்கள்
சுப்புரா,அரவானூர் பன்னீர்செல்வம், முத்தையா, மற்றும் புத்தூர் ரமேஷ், ஜெய்சங்கர், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

