திருச்சி மேயரிடம் முறையிட்டும் பலன் இல்லை .ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்
போக்குவரத்து பாதிப்பு.
ஈடுபட்டதால்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் கரை பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த மக்களுக்கு பொதுக் குழாய்கள் மூலம் காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.
ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கு சுமார் 10 முதல் 15 நிமிடம் வரை ஆனது. அதுவும் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது .
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் திருச்சி மாநகராட்சி மேயரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்
பாஜக கண்டோன்மென்ட் மண்டல் தலைவர் கார்த்தி முன்னிலையில் எடமலைப்பட்டி புதூர் பஞ்சப்பூர் செல்லும் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர் பகுதியில் காலி குடங்களுடன்.இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

