Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயியின் பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன். தொடர்ந்து திமுகவிற்கு கெட்ட பேர் ஏற்படுத்தி வரும் நபர் மீது தலைமை நடவடிக்கை எடுக்காது ஏன் ?

0

'- Advertisement -

திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயி பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன்.

 

 

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஏழை விவசாயி புகார் மனு.

 

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி புங்கனூர் கீழத் தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார். இவர் தனது மனைவியுடன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு வசித்து வருகிறார். மேலும் இவருக்காக பெரிய அளவில் யாரும் உறவினர்கள் இல்லை .

 

இந்த நிலையில் நேற்று கலெக்டர் சரவணன் இடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது :-

 

எனது பாட்டனார் சின்னையன் பெயரில் தாயனூர் வருவாய் கிராமம் புங்கனூரில் விவசாய நிலம் உள்ளது.இது எங்களுடைய குடும்ப சொத்து அந்த நிலத்தை வருவாய் ஆணையர் என்னுடைய கருத்தை கேட்காமல் வேறு ஒருவரது பெயருக்கு 10 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்துள்ளார்

 

. அதனை ரத்து செய்து என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார் .

 

பின்னர் அவர் பத்திரிகையாளர் அவர்களிடம் கூறிய போது எங்கள் ஊரில் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வந்தவர் திமுகவின் தாமோதரன். நானும் இவருக்கு தான் ஓட்டு போட்டேன் . இவர் மீது புங்கனூர் ஊராட்சியில் கையாடல் செய்ததாக அப்போதைய திருச்சி கலெக்டர் பஞ்சாயத்து செக்குகளில் கையெழுத்து போடுவதற்கு தடை விதித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து தாமோதரன் பல மாதங்கள் தலைமறைவாக இருந்த தாமோதரன் என்னை போன்று ஊரில் கேட்க ஆளில்லாத ஏழைகளின் இடங்களை இப்படி ஏமாற்றி எழுதி வாங்கி வருகிறார் .

 

 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரம் பறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தார்.

 

அப்போதே நில அபகரிப்பு செய்த புகாரில் தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தாமோதரன் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

 

அந்த நேரத்திலேயே இவர் எனது பாட்டனார் இடத்தை அப்போது டி ஓ ஆர் ஆக பணியாற்றிய ராஜலட்சுமி என்பவருக்கு பல லட்சம் கொடுத்து கமலக்கண்ணன் ஜம்புலிங்கம் உள்ளிட்ட 3 பேர் பேருக்கு பட்டா மாற்றி அதனை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தனது பேருக்கு மாற்றம் செய்து உள்ளார். ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்படுத்தி வரும் இவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பெயருக்கு பட்டா மாற்றி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.