திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு.
தமிழகத்தில் கடந்த வாரம் முதல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக அரசியல் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ. ஆர். ) குளறுபடிகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதன்படி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சி மலைக்கோட்டை சறுக்குபாறை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு த.வெ.க துனை பொதுச் செயலாளரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மோகன், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர், புறநகர் கிழக்கு மாவட்ட செலாளர் லால்குடி விக்னேஷ் , கிழக்கு தொகுதி கரிகாலன், திருவெறும்பூர் தொகுதி அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்
செந்தில், மகளிரணி துளசி,வடக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ் எஸ்.சிவா,சுந்தர் கோ. கார்த்திக்
மலைக்கோட்டை சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாடத்தில்
குழப்பாதே, குழப்பாதே வாக்காளர்களை குழப்பாதே,எஸ்.ஐ. ஆர்.ஐ காட்டிக் குழப்பாதே, வாக்காளர்களை கழிக்காதே . வாக்குரிமையை பறிக்காதே, எங்கள் ஜனநாயக உரிமை பறிக்காதே என்று கோஷங்களை எழுப்பினர்
.இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான த.வெ.க.நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

