பாபா வாங்கா உலகில் நடக்கும் விஷயங்களை மட்டும் கணித்து தனது குறிப்புகள் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் நல்ல செல்வத்தையும் வெற்றியையும் பெறுவார்கள். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது. அதோடு வங்கி இருப்பில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதோடு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள் மற்றும் இவர்களால் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இவர்களை தேடி எதிர்பாராத அளவில் பண தேடி வரக்கூடும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, அதை விரிவாக்கும் செய்யும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். இதுவரை சனியால் சிரமப்பட்டு வந்தால், இந்த புதிய ஆண்டில் சனியின் செல்வாக்கு குறைந்து, அந்த விளைவாக பல பிரச்சனைகளை திறம்பட சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். நிதி நிலையில் பெருமளவில் உயர்வைக் காண்பார்கள். அரசியலில் இருந்தால், நல்ல பதவியைப் பெறும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 2026 சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையை செழிப்பாக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ராசியின் அதிபதியான சனி பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

