திருச்சி காந்தி மார்க்கெட்டில்
காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ 50 ஆயிரம் பணம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி தென்னூர் சாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முத்துக்குமார் இவரது மனைவி செல்வி.
காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்
கடந்த பத்தாம் தேதி பணிக்கு சென்ற செல்வி தான் அடகு வைத்து இருக்கும் நகையை மீட்க ரூபாய் 50 ஆயிரம் பணத்தை ஒரு பையில் போட்டு மளிகை கடைக்கு சென்று உள்ளார். பிறகு அங்குள்ள கூடையில் பணப்பையை வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகு கூடையில் உள்ள பையை பார்த்த பொழுது பணப்பையை காணவில்லை. மேலும் அதிலிருந்த ரூபாய் 50 ஆயிரம் பணமும் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ஸ்ரீ முத்துக்குமார் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசில் புகார் தெரிவித்தார்.
அப் புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ 50 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

