வரத்து அதிகரிப்பால் தினமும் குப்பைக்கு செல்லும் பல்லாயிரம் வாழைத்தார்கள் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி வியாபாரிகள் வேதனை .
வரத்து அதிகரிப்பால் குப்பைக்கு செல்லும் தினமும் பல்லாயிரம் வாழைத்தார்கள்
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி வியாபாரிகள் வேதனை .
மத்திய, மாநில மார்க்கெட்அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.
இன்றைக்கு விசேஷ காலங்களில் வாழைப்பழங்கள் கண்டிப்பாக இடம் பெறுகின்றது. அந்த வகையில் முகூர்த்த நாள் மற்றும் திருவிழா நாட்களில் வாழைப்பழங்களின் விலை அதிகரிப்பது வாடிக்கையாக இருக்கும்.ஆனால் மற்ற நாட்களில் வாழை பழங்கள் மற்றும் வாழை தாரர்களின் விலை கணிசமாக விற்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் கடந்த சில நாட்களாக வாழைத்தார்களின் வரத்து அதிக அளவு காணப்படுகிறது. பொதுவாக திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு
திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, தேனி, கம்பம் போன்ற ஊர்களில் இருந்து வாழைத்தார்கள் வந்து வாழைக்காய் மண்டியில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் வாழைத்தார்கள் வருவது வழக்கம். ஆனால கடந்த சில வாரங்களாக 15 ஆயிரம் வாழைத்தார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக 75 டன் வாழை தார்கள் காந்தி மார்க்கெட்டுக்கு வருகின்றது
வாழைப்பழங்களில் செவ்வாழை, பூவன், ரஸ்தாலி, கற்பூரம், ஏலரசி, நேந்தரன், பச்சை லாடன், ஜின்னை பச்சை பழம், மொந்தன் காய் என பல வகை உள்ளது.
தற்பொழுது செவ்வாழைத்தார் ரூபாய் 300 முதல் 800க்கு விற்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே மிகவும் குறைந்த விலையில்
விற்கப்பட்டு வருகிறது. இதே போன்ற பூவன் பழம் தார் இன்றைக்கு 200 முதல் 400 வரை விற்கப்படுகிறது. இதற்கு காரணம் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருப்பதால் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது மேலும் வாழைப்பழம் குறித்து பொதுமக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் வாழைப்பழங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது இதனால் வாழைத்தார் விற்பனை மற்றும் வாழைப்பழம் விற்பனை களை இழந்து காணப்படுகிறது

இது குறித்து திருச்சி வாழைக்காய் – கனி வியாபாரிகள் சங்க தலைவர் கே பி பழனிவேல் பிள்ளை கூறியதாவது:-
பொதுவாக பனி, குளிக்காலத்தில் வாழைத்தார், வாழைப்பழத்தின் விலை குறைவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவநிலை மாறாக பெய்த மழை காரணத்தால் வாழைத்தாரர்களின் வரத்து அதிகரிகத்து காந்தி மார்க்கெட்டில் அதிக அளவு வாழைத்தார்கள் குவிகின்றன .
இதனால் வியாபாரம் நல்ல படியாக நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மாறாக வாழைத்தார் விற்பனை மந்தமாக நடந்து வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் கடந்த 7 மாதங்களாக அதிக வரத்து காரணமாக 600 ரூபாய் விற்பனை செய்த வாழை தார் ரூ.80 முதல் ரு150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள், வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக வாழைத்தார் விற்பனை சரியாக நடைபெறாமல் தினமும் பல ஆயிரம் வாழைத்தார்களை குப்பையில் வீசுவது தான் நடந்து வருகிறது .
இதனை பார்க்கும் பொழுது மொத்த வியாபாரிகளான எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது. எனவே
இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வாழைத்தார்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நெல் கொள்முதல் நிலையம் போன்று வாழை வியாபாரிக்களுக்கு வாழை கொள்முதல் செய்ய அரசு முன் வர வேண்டும் ,
கொள்முதல் செய்யும் வாழைத்தார்களை பல்வேறு விஷயங்களுக்கு மாநில அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக வாழைப்பழங்களை பவுடர் ஆக்கி அதனை உணவு பொருளாக பயன்படுத்தலாம் மதுபானம் தயாரிக்க வாழைப்பழத்தை பயன்படுத்தலாம் இப்படி வாழைப்பழத்தைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க முன் வரலாம்.
மத்திய அரசின் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் மாநில அரசின் தோட்டக்கலை துறை போன்றவை வாழை உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் மாறாக வாழைத்தார்களை விற்பனை செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். அவர்கள் வெறும் உற்பத்தி செய்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
உற்பத்தி மட்டும் செய்தால் போதுமா அதனை பொதுமக்கள் யாரும் வாங்கவில்லை என்றால் அந்த வாழைத்தார் என்ன ஆகும் அழுகி போகாதா அதனை பயிரிட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் என்ன ஆகுவது அதனை வாங்கி விற்கும் மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் வாழ்க்கை என்ன ஆகும் என்று தெரிய வில்லை.இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வாழை பயிர்களில் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருங்காலத்தில் வாழை பயிர் என்பது இல்லாத நிலை போய்விடும்.காலம் காலமாக இரண்டு, மூன்று தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் என்னைப் போன்ற வியாபாரிகள் வாழைத்தார் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும்…
1000 வாரை தார் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 300 வாழைத்தார் வீணாக குப்பைக்கு செல்கிறது , திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2000 வாழை தார்கள் குப்பைக்கு செல்கிறது. இந்த நிலை மாற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.

