Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோவிந்தா கோவிந்தா என திருப்பதியில் முதல் முறையாக பிறந்தநாளுக்கு ரூ.44 லட்சம் செலவு செய்து அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாள் கொண்டாடியது ஏன் ?

0

'- Advertisement -

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் , போஸ்டர்கள் அடித்து பகுதி செயலாளர் , வட்ட செயலாளர், கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வைத்து அசத்தியிருந்தனர்.

.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமலாக்கப் பிரிவு அமைச்சர் கே என் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் புகார் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக மாநில அரசு வழக்கு தொடரவும் பரிந்துரை செய்து இருந்தனர் .

 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு தான் இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாடவில்லை என கூறி திருச்சி மாநகர் முழுவதும் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டார் , பிறந்தநாள் அன்று எந்த நலத்திட்ட உதவிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார் .

 

இதனை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற அமைச்சர் கே என் நேரு அதிகாலை சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். பின்னர் தனது பிறந்த நாளான 9ஆம் தேதி அன்று திருப்பதி கோயிலில் ஒரு நாள் அன்னதான செலவான ரூ.44 லட்சத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான பணத்தை கட்டி விட்டு நேற்று திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்க திரும்பி வந்துவிட்டார் .

இந்த நிலையில் இதுவரை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அமைச்சர் கே. என். நேரு தற்போது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து வெளிவர வேண்டும் என வேண்டி அன்னதானத்திற்காகரூ. 44 லட்சம் செலவு செய்திருப்பதாக சொந்த கட்சியினரே கூறுகின்றனர் .( இதற்கு முன்னர் அமைச்சர் நேரு சட்டநாதர் கோயிலில் சட்டை இல்லாமல் வேண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது )

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.