ஸ்ரீரங்கத்தில் செலவுக்கு தாய் பணம் தராததால் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 25. )
கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார் .
இந்நிலையில் கடந்த சில மாத காலமாக முத்துராமலிங்கம் டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாய் முத்துராமலிங்கத்தை அடிக்கடி திட்டி உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று தனது தாயிடம் முத்துராமலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு உள்ளார். அவர் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முத்துராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துராமலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

