திருச்சியில் நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் முதல் மாநில விளக்க கூட்டத்தில் போலி நிதி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .
போலி நிதி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு.
நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் மாபெரும் முதல் மாநில விளக்க கூட்டத்தில் நிறுவனத் தலைவர் எம் மனோகரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
காலை 9 மணி முதலே தமிழ்நாடு முழுவதும் இருந்து மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்களும், நெட்வொர்க் மார்க்கெட்டிங் தலைவர்களும் திரளாக 2000 திற்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சரியாக 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
உயிரிழந்த முன்னாள் நெட்வொர்க் தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் நிறுவன தலைவர் எம் .மனோகரன் தனது சிறப்புரையில் கூறியதாவது:

மூன்று அம்ச கோரிக்கைகள்: 1) நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் கேரளாவை போல் சட்டம் இயற்றி தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும் அதன் மூலம் மக்களை ஏமாற்றும் போலி நிதி நிறுவனங்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும்.
2) நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையும் அமைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
3) நெட்வொர்க் துறையில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பயன்படும் வகையில் நல வாரியம் அமைக்க வேண்டும் இந்த மூன்று அம்ச கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் கட்சிகளுக்கே எங்கள் ஆதரவு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மாபெரும் முதல் மாநில விளக்க கூட்டத்திற்கு துணைத் தலைவர் உயர்நிலைக் குழு உறுப்பினர் திருச்சி வழக்கறிஞர் பிரபாகரன் தலைமை உரையில் அனல் பறக்கும் சூறாவளி சிறப்புரையாற்றினார்,
வைத்தியநாதன் அகில உலக ஒருங்கிணைப்பாளர், பவுல்ராஜ் அகில உலக இணை ஒருங்கிணைப்பாளர்,
ரூபன் உயர்நிலைக்குழு உறுப்பினர் அகில இந்திய துணைத் தலைவர்,
அகில இந்திய துணைத் தலைவர் உயர்நிலைக்குழு உறுப்பினர் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் ஆகியோர்
சிறப்பு ஆற்றினார்கள் .
அகில இந்திய இணை செயலாளர் உயர்நிலைக் குழு உறுப்பினர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருச்சி மாவட்ட தலைவர் செல்வராஜன், திருச்சி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் திருச்சி மாவட்ட அமைப்பாளர், ஃபாரூக் உசேன்,மாவட்ட துணை தலைவர் கருத்து கந்தசாமி, கணபதி இளங்கோவன், செய்தி தொடர்பாளர் முத்துசூர்யா,

கரோலின்,விக்டோரியா செல்வி, டபிள்யூ செல்வி, சரண்யா, காயத்ரி மகளிர் அணி பொறுப்பாளர்கள், சுப்பிரமணியம், கோபி, ஆறுமுகம் மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன், வில்லியம், சார்லஸ், ஜான் கென்னடி, ஜனாதிபதி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் நிறுவனத் தலைவர் எம். மனோகரன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்.

