திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் , புகையிலை விற்ற 8 பேர் கைது .
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் சரரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்
திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இ.பி ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே
போதை மாத்திரை விற்ற லால்குடி பெருவள நல்லூர் பகுதியை சேர்ந்த பாலாஜி ( வயது 22 ), பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 25) ஆகியோரை
கைது செய்து அவர்களிடமிருந்த 30 போதை மாத்திரைகள், மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேர் கைது

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்மலை, ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் . அப்போது பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே புகையிலை விற்ற மணப்பாறை மணியகுறிச்சி பகுதியை சேர்ந்த வினோத் (வயது 26),ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு அருகே புகையிலை விற்ற சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் ( வயது 30 )
ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 270 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
லாட்டரி விற்ற
4 பேர் கைது:-
இதேபோல் திருச்சி அரியமங்கலம் தில்லை நகர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் இந்த சோதனையில் அரியமங்கலம் சீனிவாசன் நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விட்டதாக மீனாட்சி சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல் தில்லை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சையது ஹவுஸ், அப்சாலி, ஜாபர் சாதிக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

