கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா் ஆர்ப்பாட்டம்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக திருச்சி புறநகர் மாவட்ட மகளிரணித் தலைவா் மங்கலம் கௌரி, மாநகா் மாவட்ட மகளிரணித் தலைவா் மலா்க்கொடி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், கோவையில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக கூறி, திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் கலந்துகொண்டனா்.

