ரவுடி எல்லாம் போதை மாத்திரை விக்க ஆரம்பிச்சிட்டாங்க . …. திருச்சி பாலக்கரை ,தில்லை நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
ரவுடி எல்லாம் போதை மாத்திரை விக்க ஆரம்பிச்சிட்டாங்க . ….
திருச்சபாலக்கரை ,தில்லை நகர் பகுதியில்
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
மாத்திரைகள் பறிமுதல்.

திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு போதை மாத்திரை விற்பனை செய்த பாலக்கரை ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்த திலீப் (வயது 22). என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது
இதேபோன்று தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாங்குளம் ரயில்வே ட்ராக் பகுதியில் கோதை மாத்திரை விற்பனை செய்த திருச்சி ஜீவா நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிற கோளாறு கார்த்தி ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 5 போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது கைதான கார்த்திகேயன் அரியமங்கலம் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலில் ரவுடி பட்டியலில் உள்ளார்.
தற்போது திருச்சி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரையில் ஈடுபட்டு வரும் ரௌடிகள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

