திருச்சியில் தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி விழிப்புணர்வு விளக்க கூட்டம்
திருச்சியில் தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி
விழிப்புணர்வு விளக்க கூட்டம் மற்றும் பாஜக பொருளாதார பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் கே. எஸ். சங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார் .
பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் டி.ரிகன்யா அறிமுக உரை நிகழ்த்தினார்.
பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி சுரேஷ் தலைமை தாங்கி
பேசினார்.
இதில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே. ஒண்டி முத்து, திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் எம். காளீஸ்வரன், திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஏ என் எம் அழகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முடிவில் திருச்சி மாவட்ட துணை தலைவர் என். ராமநாதன் நன்றி கூறினார்

