திருச்சி 58வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்- அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர்கள்
திருச்சி 58வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்- அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 58 க்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிராப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்ற உறுப்பினர் கவிதா செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணைகளை வழங்கினர்.
இந்த முகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி பொதுகுழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

