திருச்சி பிச்சாண்டார் கோயில் மாருதி நகரில் அமைந்துள்ள குழந்தையேசு திருத்தல கல்லறை தோட்டம் பராமரிக்க ரூ.20 லட்சம் கேட்டு கலெக்டரிடம் மனு .
திருச்சி பிச்சாண்டார் கோயில் மாருதி நகரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்து பங்கு
குழந்தையேசு திருத்தல பங்கு தந்தை ஆரோக்கியசாமி சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
பொருள்:
மண்ணச்சநல்லூர் தாலுக்கா பிச்சாண்டவார் கோவில் கிராமம், மாருதி நகரில் அமைந்துள்ள குழந்தையேசு திருத்தல பங்கு மக்களின் கல்லறைத் தோட்டம் முள்வேலி முற்றிலும் பழுதடைந்துவிட்டது. கல்லறை தோட்டம் சுற்றிலும் செங்கல் சுற்று சுவர் அமைத்து பராமரிக்க வேண்டியிருப்பதால், அருட்கூர்ந்து ஊக்கத் தொகை. ரூ. 20,00,000/ கோரி மனு சமர்பித்தல் சம்மந்தமாக.
பார்வை:
1 தமிழக அரசு சட்டசபையில் முதலமைச்சர் அவர்கள். 23.112021 ம் தேதியன்று 110 விதியின் படி சிறுபான்மை மக்களின் தேவாலயம் புதுப்பிக்கவும் இதர வளர்ச்சி பணிக்காகவும் நிதி ஒதுக்கப்படுகிறது. என அறிவித்தன் பொருட்டு நிதி உதவிகேட்டல் சம்மந்தமாக
2 தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறை 24.11.2021ம் தேதி பிரபல நாளிதழில் வெளியிட்ட விளம்பரம்.
3. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு ஓப்படைத்த நாள்:
23.08.2025
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார்கோவில் பஞ்சாயத்து மாருதி நகரில் அமைந்துள்ள குழந்தையேசு ஆலய பங்கை சேர்ந்த சிறுபான்மை மக்களாகி நாங்கள் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் பணிந்து சமர்ப்பித்துக் கொண்ட மனுயாதெனில்,
அரசாங்கத்தால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்லறை நோட்டத்தை 2014 ம் ஆண்டில் இருந்து சுற்றிலும் முள்வேலி அமைத்து முழுமையாக பராமரித்து வந்தோம். நாளடைவில் மின் வேலியை இரவில் வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் தொடர்ந்து செலவு செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். எனவே பொருளில் சொல்லப்பட்ட விசயத்திற்காக பார்வையில் கண்டுள்ளபடி எங்களது கல்லறை தோட்டத்தை சரியானபடி சுற்று அவர் எழுப்பி பராமரிப்பு செய்து கொள்ள ஊக்கத் தொகை ரூ. 20 இலட்சம் கொடுத்து உதவி செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பார்வை 2 ல் உள்ளபடி கண்ணுற்று உதவிசெய்யவும்.
இடம் 50 சென்ட் என்பது 80.5-ஆக மாற்றி தரும்படியாகவும்

குழந்தை இயேசு கோவில் கேட்டில் இருந்து வீதிக்கு சுமார் 100 அடி மண்ணாக உள்ளது.மழை காலத்தில் மக்கள் கோவிலுக்கு வர சிரமமாக இருப்பதால் அதனை தார்சாலையாக அமைத்து தர வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கோவில் வளாகத்தில் கோவில் வரும் வயதானவருக்கு கழிப்பிடவசதி செய்துதா கேட்டுக்கொள்கிறோம்.
என
குழந்தை இயேசு திருத்தல பங்குத்தந்தை சார்பில் பங்கு மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது

